Monday, February 7, 2011

திராவிட வரலாறு

சில நாட்களுக்கு முன் வேலையே இல்லாத ஒரு சுபயோக சுபதினத்தில் , இன்டர்நெட்டில் பொழுதை போக்கிக்கொண்டிருக்கும் பொழுது , நூல்உலகம் என்ற வலைத்தளத்தில் "திராவிட வரலாறு பாகம் 1 " என்ற நுலை கண்டேன். நமக்கு தெரியாத வரலாறா என்று எண்ணியபோதும் , ஏனோ படிக்கவேண்டும் என்று தோன்றியதல் உடனே வாங்கினேன். விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்தே அது இருந்தது.

ஆக இதுவரை என்னக்கு திராவிட வரலாறு தெரியாமல் இருந்திருக்கிறது. அதில் உள்ள சில உண்மைகளை தொகுத்துள்ளேன். உங்களுக்கு இவை தெரியுமா என்று பாருங்கள்.

* காங்கிரஸ் குல கல்வி ( அதாவது அவரவர் ஜாதி தொழிலையே அவரவர் படிக்கவேண்டும் ) என்ற முறையை திராவிடர் கழகத்தின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்தது.

* பெரியார் நடத்திய வைக்கம் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை காந்தி ஆதரிக்கவில்லை.

* பெரியார் ஆங்கிலேயரை விட காங்கிரஸ் கட்சியையே வெறுத்தார்.

* நீதி கட்சி மற்றும் திராவிடர் கழகதினர் இந்திய விடுதலையை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை.

* இந்தியா குடியரசு தினத்தை ( சன் 26 1950 ) கருப்பு தினமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் கடைபிடித்தனர்.

* 1965 ஆண்டில் ஹிந்தி மட்டுமே அணைத்து நிலையிலும் ஆட்சி மொழியாய் இருக்க வேண்டும் என்று 1950 இல் இந்திய அரசு முடிவு செய்தது. அனைத்து அரசு தேர்வுகளும் ஹிந்திலேயே நடக்கும். அனைத்து மாநில சட்டசபைகளும் ஹிந்தியிலேயே இயங்கும். அனைத்து மாநில உயர்நீதிமன்றதிலேயும் ஹிந்தி மட்டுமே உபயோகபடுத்தபடும். அரசு கல்விக்கு வழங்கும் அனைத்து மானியங்களும் ஹிந்தி மொழிக்கு மட்டும் வழங்கப்படும்.

* ஹிந்தி மொழியை கல்லாதவர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று இந்திய மத்திய மந்திரியே தெரிவித்தார் .

* ஹிந்தி கல்லாதவர் தேச துரோகி என்பதே காங்கிரஸின் நிலை.

* 1965 இல் தமிழகத்தில் கலவரம் உண்டானபொழுது ஆங்கிலேயரைவிட கொடுமையான அடக்குமுறைகளை மத்திய மாநில காங்கிரஸ் ஆட்சிகள் பின்பற்றின.

* 1965 பல நுறு பேர்களை கொன்றபிறகும் தன் நிலையில் மாறாத இந்திய அரசை உலக நாடுகள் மற்றும் ஐநா சபை கண்டித்தன.

* குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் கண்டித்த பின்னரே பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்த்ரி தன் முடிவை மாற்றினார். தமிழும் தப்பித்தது ..


தமிழக அரசியல்வாதிகள் ( முக்கியமாக கலைஞர் ) "தமிழ் தமிழ்" என்று அறிக்கை விடும்பொழுது ஒட்டு அரசியல் தான் செய்கிறார் என்றே அதை அலட்சியம் செய்துவந்தேன். நண்பர்கள் பலரும் அப்படியே எண்ணினர். ஆனால் தமிழை காப்பற்ற பல தியாகங்களை செய்துள்ளனர். இப்பொழுது எப்படி இருந்தாலும் , அன்று அவர்கள் செய்தது மிக பெரிய சாதனையே.


இந்த உண்மைகள் தமிழர் பலருக்கு ( 20- 30 வயதில் உள்ளவர் ) தெரியாது என்பதை நண்பர்கள் முலம் உறுதி செய்துகொண்டேன். இத்தகைய முக்கியமான வரலாறு ஏன் எந்த பாட புத்தகதிலேயும் இடம் பெறவில்லை ?

வென்றவர் எழுதுவதே வரலாறு என்பது பழமொழி. ஆனால் தமிழ் நாட்டில் தோற்றவர் தான் வரலாற்றை எழுதினர் போலவும்.

4 comments:

 1. keep posting like this...

  ஜெயிச்சவன் எழுதுவதுதான் வரலாறு,அது 90% டகிலுதான்.
  சுபாஸ் சந்திர பாஸ் பத்தி எதாவது புக் இருந்த சொல்லுடா.
  அந்த மனுஷன் என்ன ஆனாருன்னே தெரியலே.சுதந்திரம் எதுக்காக கிடச்சதுன்னும் தெரியலே.

  ReplyDelete
 2. Saving MuthuKumar's comments from FB

  Muthu Kumar
  நல்ல கட்டுரை நண்பா..!! அருமையான நடை...

  உண்மையில் சொல்ல போனால் இந்தியா ஆங்கிலேயருடன் போராடும் போது, தமிழகம் காங்கிரசுடன் போராடிக்கொண்டு இருந்தது. இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் இத்தாலிய மங்கையின் மாமியார் தமிழகத்தையும் தமிழுக்காக போராடியவர்...களையும் ஒரு கிள்ளுக்கிரையாக பார்த்ததை பதிவு செய்த புத்தகங்களை பலர் படிக்காததால் மட்டுமே திராவிட கழகத்தின் இன்றைய நிலைமையை மட்டுமே சுட்டி காட்டி புறம் பேசுகிறார்கள். இன்று கலைஞரை ஏளனமாக பேசும் எண்ணற்ற இளைஞர்களில் எத்துனை பேருக்கு அவர் ஹிந்தி ஆக்கிரமிப்பை அகற்ற தண்டவாளத்தை தலையணை ஆக்கியது தெரியுமோ. சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டகளுக்கு மேல் ஆகியும் தமிழகம் ஒரு ஒடுக்கப்பட்டு மாநிலமாகவே பார்க்கப்படுகிறது காங்கிரசால். கல்மாடி களவாணியை கைது செய்யாத காங்கிரசு அரசு சூழ்நிலை காரணமாக குற்றம் சாட்டப்பட்ட ராசாவை பாய்ந்து சென்று கைது செய்தது அவர் ஒரு தமிழன் என்பதாலோ என்னவோ... அரசியில் காய்கள் நகர்த்த காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் நிலை தமிழகத்திற்கு இனி வரும் காலத்திலாவது வராமல் இருக்க வேண்டும்.

  உதயசூரியன் பல்லாண்டு காலம் ஒளி வீசி தமிழகம் புகழ் பார் எங்கும் ஒளிர வேண்டும்..

  ReplyDelete
 3. மிக அருமையான தொகுப்பு நண்பா.. மென் மேலும் தொடர்ந்து எழுத, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Prasanna AlagesanApril 8, 2011 at 2:40 AM

  Very fine points discussed herein.. But when I was reading this... my already polarized mind was asking ... Is this a fact or fiction?

  Need to dig more to find out from the newspapers of that era...

  ReplyDelete